நான் நடிக்கிறதுக்கு முன்னாடி பாடகியாக தான் இருந்தேன்.. அவங்க தான் எங்க அம்மா.. விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் பலருக்கும் பரிச்சயமானவர்தான் டி கே கலா. கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக இவர் நடித்திருப்பார். அவரைப் பார்த்ததும் அம்மாடி இப்படி ஒரு அம்மாவா? இதுபோல யாருக்கும் ஒரு மாமியார் கிடைக்கவே கூடாது என்று பல பெண்கள் பயந்து போகும் அளவில் தான் அவருடைய கேரக்டர் இருந்தது. ஆனால் அவர் ஒரு பிரபலமான பாடகி என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். பல வருடங்களுக்கு முன்பு வெளியான அகத்தியர் திரைப்படத்தில் இடம் பெற்ற தாயின் சிறந்த கோவிலும் இல்லை என்ற பாடலை பாடியது இவர்தான். அதுபோல முன்னணியை பாடகர்கள் பலரின் பாடல்களில் இவர் பல பாடல்களை பாடி உள்ளார்.

அதுபோல ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற வந்தனம் வந்தனம் பாடல், பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற போய் வா நதியலையே என்ற பாடலையும் இவர் தான் பாடியுள்ளார். அதனைப் போல ஏ ஆர் ரகுமான் இசையில் டூயட் திரைப்படத்தில் இடம் பெற்ற குளிச்சா குற்றாலம் பாடல், கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற ஆராரோ ஆரிராரோ, மறுமலர்ச்சி, தாஜ்மஹால் மற்றும் சிவப்பதிகாரம் போன்ற பல படங்களில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகையாகவும் கில்லி படத்தில் மட்டுமல்லாமல் கஸ்தூரிமான், வெயில், குருவி, பிரிவோம் சந்திப்போம், ஐ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது பேசினார். அப்போது, நான் முதலில் பாடகியாக தான் அறிமுகமானேன். அதன் பிறகு தான் நடிக்க ஆரம்பித்தேன். சமீபகாலமாகத்தான் நடித்துக் கொண்டிருக்கின்றேன். முதலில் நான் பாடகி தான். என்னுடைய அம்மா மிகப்பெரிய நடிகை.

“காலையில தானடா மகாலட்சுமி சொல்லிட்டு போன, அது வேற வாய் இது நாற வாய்” என்ற வடிவேலு காமெடிகள் அவருக்கு தாயாக வருபவர் தான் என்னுடைய அம்மா. நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். என் அம்மாவின் மறைவுக்குப் பிறகு என்ன நடிக்க கூப்பிட்டாங்க. புகழ்பெற்ற இயக்குனர் தரணி தான் என்னை முதன் முதலில் நடிக்க அழைத்தார். அப்போதான் கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் அம்மாவாக நடித்திருந்தேன். அடுத்ததாக தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தேன். ஆகவே அந்தப் படங்களுக்கு பிறகு தான் நான் நடிகையானே தவிர அதற்கு முன்பு பாடகியாக தான் இருந்தேன் என கலா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

5 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

5 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

5 மணத்தியாலங்கள் ago