Categories: சினிமா

வெற்றிமாறனுக்காக அவருடைய மனைவி ஆர்த்தி செய்த நெகிழ வைக்கும் செயல்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது மற்றொரு மாஸ் படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். கே ஜி எஃப் திரைப்படத்தை மையமாக வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை எடுக்க உள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல் ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் மனைவி ஆர்த்தி தனது கணவர் பற்றி பேசியுள்ளார்.  அதில், என் கணவருடைய வாழ்க்கையில் பல பொருட்கள் முதல் முறையாக நான் வாங்கிக் கொடுத்தது தான். ஃபர்ஸ்ட் மொபைல், ஃபர்ஸ்ட் லேப்டாப், ஃபர்ஸ்ட் பைக், ஃபர்ஸ்ட் கார் என எல்லாத்தையும் நான் தான் முதல்முறையாக அவருக்கு வாங்கி கொடுத்தேன். எனக்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது பல்கா ஒரு லட்சம் ரூபாய் அமௌன்ட் வந்தது.

அதை வீட்டுக்கு கொடுக்காம அப்படியே நான் மறைச்சிட்டேன். அந்தப் பணத்தை வைத்து முதல் முறையா அவருக்கு நான் ஆர் எக்ஸ் 100 பைக் வாங்கி கொடுத்தேன். இவர் முதலில் பாலு மகேந்திரா சார்கிட்ட வேலை பார்த்துட்டு இருக்கும்போது அவர் கூப்பிட்டா அவசர அவசரமா ஓடுவாரு. நிறைய டைம் பஸ்ல போறது பார்த்து கஷ்டப்பட்டு இருக்கேன். அதுமட்டுமல்லாமல் இவருடைய சக நண்பர்கள் அனைவரும் பைக் வைத்திருப்பார்கள். இதெல்லாம் நான் பாத்துட்டே இருந்தேன். அதன் பிறகு தான் இவருக்காக ஆர் எக்ஸ் 100 பைக் வாங்கி கொடுத்தேன் என்று வெற்றிமாறன் மனைவி எமோஷனலாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

4 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago