68 வயது நடிகருடன் கூட்டணி சேரும் நடிகை திரிஷா… வெளியான தகவலால் கடுப்பில் இருக்கும் திரிஷாவின் ரசிகர்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் இவரது கேரியர் கொஞ்சம் டல் ஆனது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

   

இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக கமலுடன் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் த்ரிஷா. இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்ற படத்தில் இருவரும் நடித்தனர். தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதை நடிகை திரிஷாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

18 வருடங்களுக்கு இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணா இயக்க உள்ளதாகவும், சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. தற்பொழுது 68 வயதாகும் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை திரிஷா இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. ஆனால் ஒருசிலரோ அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)