Connect with us

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகை தனன்யா வா இது…? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் பர்த்டே கிளிக்ஸ்…

GALLERY

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகை தனன்யா வா இது…? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் பர்த்டே கிளிக்ஸ்…

 

தமிழ் திரை உலகில் ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனன்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

   

2009 ல் வெளியான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ராமகிருஷ்ணன் என்பவர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக நடித்த தனன்யா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் இதனை அடுத்து அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது மருத்துவ படிப்புக்கு விடுமுறை எடுத்து சினிமாவில் நடித்து வந்த தனன்யா, சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட விலகி மருத்துவ படிப்பை முழுமயாக தொடர்ந்து மருத்துவராகவும் மாறினார்.

இந்த நிலையில் நடிகை தனன்யா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாகவே ஒரு மருத்துவராகவும் குடும்பத்தலைவியாகவும் மாறிவிட்டார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தனன்யா.  இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ நடிகை தனன்யா வா இது…? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top