என்னது தமன்னாவுக்கு கல்யாணமா…?  இவர் தான் மில்க் பியூட்டியின் கணவரா..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்னொரு அதிர்ச்சி…

By Begam on கார்த்திகை 17, 2023

Spread the love

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், அஜித் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகக்குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, ஹிந்தி என பல  மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.  தற்போது ஹிந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

   

சமீபத்தில் இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். அதில் இவர் ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்தி வெப் சீரியஸ்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

   

 

 

தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா. இதைத்தொடர்ந்து திரைப்படங்கள் , விளம்பரங்கள் , மாடல் என பிசியாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை தமன்னா. நடிகை தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக இணையத்தில் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவர்களிருவரும் சுதந்திர காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களிருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  மேலும் திருமணத்திற்கு பின்பு தமன்னா சினிமாவில் இருந்து விலகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .