முன்னணி நடிகையான தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். இவர் முன்னாடி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
கடைசியாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடினார். அந்தப் பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பெட்ரோமாக்ஸ் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்தார்.
அதன் பிறகு தமிழில் நடிக்காமல் பிற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தமன்னாவுக்கு தனி மவுசு உள்ளது. காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆட தமன்னா 2 முதல் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.
அதன்பிறகு மீண்டும் மார்க்கெட் உயர்ந்ததால் தமன்னா தனது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தினார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை 4 படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது பிங்க் நிற மார்டன் கிளாமர் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து தமன்னா புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.