காதலனுடன் நெருக்கமாக நடிகை தமன்னா… இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on ஆவணி 2, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.

   

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.

   

 

இந்நிலையில் விஜய் வர்மாவுடனான தனது காதலை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த பேட்டி ஒன்றில் ‘ஒருவருடன் இணைந்து நடிக்கிறோ‌ம் என்பதால் அவர் மீது ஈர்ப்பு வந்துவிடாது. பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழவேண்டும் என்றால் அந்த ஒருவருக்காக எதையாவது உணரவேண்டும்.

நான் எனக்கான உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் தனது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். எனது உலகத்தை புரிந்துக் கொண்ட ஒருவர் கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்’என்று தெரிவித்திருந்தார்.

தற்பொழுது நடிகை தமன்னாவும் , நடிகர் விஜய் வர்மாவும் இணைந்து lust stories என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகை தமன்னாவின் காதலரான விஜய் வர்மா தற்பொழுது ‘கால்கூட்’ என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் ஜியோ ஓடிடி தளத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

சமீபத்தில் நடைபெற்ற கால்கூட் பிரீமியர்  நிகழ்ச்சியில் தனது காதலருடன் நடிகை தமன்னா கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.