அமெரிக்காவில் சுதந்திர தின விழாவை அங்குள்ள மக்களுடன் கொண்டாடிய நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ..

By Begam on ஆவணி 16, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார்.

   

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.

   

 

இந்நிலையில் விஜய் வர்மாவுடனான தனது காதலை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார்.  தற்பொழுது நடிகை தமன்னாவும் , நடிகர் விஜய் வர்மாவும் இணைந்து lust stories என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகை தமன்னாவின் காதலரான விஜய் வர்மா தற்பொழுது ‘கால்கூட்’ என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் ஜியோ ஓடிடி தளத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை தமன்னா அமெரிக்காவில் சுதந்திர தின விழாவை அங்குள்ள மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)