Actress Tamanna

எனக்கே அது தெரியலே… மத்தவங்களுக்கு எப்படி தெரியும்? நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட் – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 8, 2026

Spread the love

நடிகை தமன்னா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வியாபாரி கல்லூரி பையா தோழா சுறா படிக்காதவன் வேங்கை என தமிழில் பல படங்களில் நடித்த தமன்னா பிறகு தெலுங்கு படங்களிலும் இந்தியிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்தியில் எல்லை தாண்டிய கவர்ச்சியில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அத்துடன் பெரிய ஹீரோக்களின் படங்களில் அடிக்கடி கவர்ச்சி குத்தாட்டமும் தமன்னா போட்டு வருகிறார். இதுகுறித்து நடிகை தமன்னா கூறியதாவது, திடீரென நான் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறேன். பிறகு அப்படி நடிக்க மறுக்கிறேன். இது எதனால் என்று கேட்டு உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என சிலர் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். ஏனென்றால் என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களால் எப்படி முடியும் என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.