தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களைப் பல்வேறு திரை பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரது முதல் பட கதாநாயகியான நடிகை ஸ்வாதியும் விஜய்யைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘தேவா’ திரைப்படத்தில் பள்ளிப் பருவத்திலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்வாதி. விஜய் உடனான பழைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், திரையுலகிலும் பொதுவாழ்விலும் சவால்களை எதிர்கொண்டு முதலமைச்சராக உயர்ந்திருக்கும் விஜய்யின் கடின உழைப்பைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நடிகராக இருந்து ரியல் தலைவராக உருவெடுத்துள்ள விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்தத் தான் ஆவலாகக் காத்திருப்பதாகவும், ரசிகர்கள் பலரும் இந்தச் சந்திப்பு எப்போது நடக்கும் எனத் தன்னிடம் கேட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் ஸ்வாதியின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், அவருக்குச் சந்திப்புக்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
