வெயிலுக்கு சும்மா ஜில்லுனு இருக்கு.. ஐஸ் மெடிடேஷன் செய்யும் நகுல் பட நாயகி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

By Priya Ram

Published on:

நடிகை சுனேனா ஒரு மாடலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தெலுங்கில் குமார் vs குமாரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி பிரசாத் இயக்கத்தில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சுனைனா கதாநாயகியாக அறிமுகமானார்.

   

அவருக்கு ஜோடியாக நகுல் நடித்திருந்தார். அவரது முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மீண்டும் நகுலுடன் இணைந்து மாசிலாமணி படத்தில் சுனைனா நடித்தார். கடந்த சில வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்தெடுத்து சுனைனா நடித்து வருகிறார்.

கடைசியாக ரெஜினா படத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. சில வெப் சீரியசலும் சுனைனா மும்முரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் பிட்னஸிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார் சுனைனா.

அவர் ஐஸ் மெடிடேஷன் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உடலில் இருக்கும் நரம்புகள் தசையை பலப்படுத்துவதற்காகவும் வலிகளை போக்கவும் ஐஸ் பாத் எடுப்பதை பிரபலங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)

author avatar
Priya Ram