Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோ..!!

CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோ..!!

 

சோசியல் மீடியாவில் பிரபலங்கள் சிறுவயதாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் இப்போது நடிகை சுனைனா தனது தாயுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறுவயதில் சுனைனா எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா.

   

கடந்த 1989-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுனைனா பிறந்தார். நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு உனக்குள் காதலின் விழுந்தேன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக சுனைனா நடித்தார். இதுதான் தமிழில் சுனைனாவின் முதல் திரைப்படம். முன்னதாக கடந்த 2006-ஆம் ஆண்டு சம்திங் ஸ்பெஷல் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரைப்படத்தை ஆரம்பித்தார்.

அடையாளமே தெரியலையே.. நம்ம சுனைனாவா இது.. பிரபுதேவா பாட்டுக்கு அப்பவே அப்படி  ஆடியிருக்காங்க! | Sunaina shares her school annual function dance photo to  her fans! - Tamil Filmibeat

பின்னர் மலையாளத்தில் பெஸ்ட் பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை, சமர், வன்மம் தெறி உள்ளிட்ட படங்களிலும் சுனைனா நடித்தார். மேலும் ஒரு சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சுனைனா நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார் நடிகை சுனைனா ! | Actress Sunainaa  tests negative for covid 19 - Tamil Filmibeat

அவர் தனது வருங்கால கணவர் பற்றி சமூக வலைதளத்தில் கூறாமல் ரகசியம் காத்து வந்தார். இந்நிலையில் துபாயை சேர்ந்த பிரபல யூடியூபரான கலில் அல் அமேரி என்பவருக்கும் சுனைனாவுக்கும் நிச்சயம் நடந்தது தெரியவந்தது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கலில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அறிந்த ரசிகர்கள் எப்படி இருந்தாலும் சுனைனா நல்லா இருங்க என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லாமே க்யூட்!..எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. புடவையில் மனதை சுருட்டிய சுனைனா…  - CineReporters

author avatar
Priya Ram
Continue Reading
To Top