ஜாலியாக குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை… வைரலாகும் கியூட் வீடியோ…

By Begam on ஆனி 4, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல் என பல விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்டி வருகிறது.

   

இல்லத்தரசிகளின் மிக விருப்பமான சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.  தற்பொழுது இந்த சீரியலில் கண்ணனால் மிகப்பெரிய பிரச்சனை நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

   

 

நல்ல அண்ணியாக, ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் தனம். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகை ஆவார். சிறுவயதிலிருந்தே வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சுஜிதா. இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சுஜிதா. தற்பொழுது இவர் தனது குழந்தைகளுடன் இணைந்து விடுமுறையை ஜாலியாக கொண்டாடும் அழகிய வீடியோ இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)