சொகுசு காரை வாங்கி கனவை நனவாக்கிய பிரபல சீரியல் நடிகை… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

By Begam on கார்த்திகை 30, 2023

Spread the love

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

தற்பொழுது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’, பொன்னி  போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி’ சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியின் பொன்னி சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

   

 

செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு  ‘சித்தாரா சீந்தலா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் மீண்டும் தற்பொழுது இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை சமீபத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர்  அப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்பொழுது இவர் தனது சொகுசு கார் வாங்கும் கனவு நனவாகி இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…