“இனிது இனிது, பையா” போன்ற படங்களில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? 

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் தனக்கென தனது திறமையான நடிப்பால் ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சோனியா தீப்தி. இவர் 2007ல் வெளிவந்த ‘ஹேப்பி டேஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 2010ல் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘பையா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார்.

   

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த  கல்லூரி காதல் கதையான ‘இனிது இனிது’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அவரின் தெலுங்கின் முதல் படமான  ‘ஹேப்பி டேஸ்’ என்ற படத்தை ரீமேக் செய்து தமிழில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் , தெலுங்கு மட்டுமின்றி கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  2017ஆம் ஆண்டு தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போதும் இவர் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர்  சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்பொழுது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை சோனியா தீப்தியா இது..? இப்படி குண்டாகிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…