தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் எப்போதுமே சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களின் கதைக்களம் என்பது ரசிகர்களின் மனதை கவரும் வகையில் விறுவிறுப்பாக இருக்கும். குறிப்பாக கயல், மூன்று முடிச்சு, மருமகள் உள்ளிட்ட சீரியல்கள் எப்போதுமே டிஆர்பி யில் போட்டி போட்டுக் கொண்டு டாப் 5 இடங்களைப் பிடித்து விடும். அதன்படி கடந்த நான்கு வருடமாக விறுவிறுப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல்.

இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி ஹீரோயினியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வருகின்றார். சுமார் 1000 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் அடுத்தடுத்து பிரச்சனைகள் மட்டும் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்திலிருந்து திருமணம் முடிந்த பிறகும் கையல் ஓராயிரம் பிரச்சனைகளை தன் குடும்பத்திற்காக சந்தித்து வருகின்றார். தயவுசெய்து சீரியலை முடித்து விடுங்கள் என்று ரசிகர்களை கெஞ்சும் அளவுக்கு கதை சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வராமல் விறுவிறுப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரசிகர்களை கவரும் வகையில் தற்போது புதிதாக ஹீரோயின் ஒருவரை கயல் சீரியலில் களமிறக்கி உள்ளனர்.

அதாவது தமிழ் சினிமாவில் முன்னொரு காலகட்டத்தில் ஒரு கலக்கு கலக்கிய நடிகை சோனியா அகர்வால் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் மூர்த்தி பற்றி தெரிந்த ஒரு கேரக்டராக சோனியா அகர்வாலை கொண்டு வந்துள்ளனர். அவரின் வருகைக்குப் பிறகு கதைக்களம் மாற உள்ளதாக தெரிகிறது. இதனால் இனி வரும் எபிசோடுகள் ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. கயல் சீரியலில் மூர்த்தி பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வரும் ஒரு கதாபாத்திரமாக சோனியா அகர்வால் கேரக்டர் இருக்க வாய்ப்புள்ளது. அவருடைய வரவால் இனி கயல் சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் என தெரிகிறது.

தமிழ் சினிமாவில் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த பிரபலமான சோனியா அகர்வால் அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடித்திருந்தார். சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராக அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிற சில ஆண்டுகளில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த சோனியா அகர்வால் தற்போது சினிமாவில் பெரிதாக நடிப்பதில்லை. தற்போது இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் திரும்பி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
