Connect with us

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

CINEMA

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

 

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள்.

பாலிவுட் சினிமாவில் மிக முக்கிய நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். முதன்முதலாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் என்கின்ற சல்மான் கான் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அப்படத்தின் இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் இவர் நடித்திருந்தார்.

   

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் ஜாக்கீர் இக்பால் என்பவரை ஏழு வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ் எல் என்கின்ற திரைப்படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறியிருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பிருந்தே அவர்கள் டேட்டிங் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பிறகு சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடுவார் என பல வதந்திகளும் பரவி வந்தது.

இது குறித்து பேசிய நடிகர் ஜாஹரின் தந்தை அவர் மதம் மாறவில்லை, அது நிச்சயம் நடக்காது. இரு மனங்கள் ஒன்றிணைந்த பிறகு இதில் மதத்திற்கு எந்த ஒரு பங்கும் கிடையாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் காரில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து வெளியே வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் ஆகிய ஆறு நாட்கள் தான் ஆகின்றது. அதற்குள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் சோனாக்ஷி சின்ஹா. ஒருவேளை கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top