நடிகை சோபிதா துலிபாலா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் பங்கேற்று மிஸ் இந்தியா 2013 பட்டத்தை வென்றார்.
நடிகை சோபிதா அனுராக் காஷ்யபின் இயக்கிய ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மேட் இன் ஹெவன் வெப் சீரிஸ் மூலம் சோபிதா பிரபலமானார். மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சோபிதா நடித்த குருப் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
தமிழில் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோபிதா நடித்தார். இவர் ராஜராஜ சோழனின் மனைவி வானதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அவ்வபோது போட்டோஷூ்ட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது கருப்பு நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் சோபிதா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.