தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.
இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சினேகா தன்னுடைய மகன் விஹான் எட்டாவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
தற்போது சினேகா சில புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவில் தன்னுடைய மகனிடம் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எப்படி கொண்டாட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்போது உடனே அவர் ஆதரவற்ற குழந்தைகளுடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கூறியதாக கூறி ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…