“என்னால் நடக்கவே முடியாது, படுத்த படுக்கையாக”… மேடையிலேயே கண்ணீர்விட்ட நடிகை சினேகா…!

By Muthu Mani on மாசி 27, 2026

Spread the love

திரையுலகில் ‘புன்னகை அரசி’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா, சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையில் எப்போதும் புன்னகையுடனும் துடிப்புடனும் காணப்படும் சினேகாவின் இந்த மறுபக்கம், ஒரு கலைஞனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் வலிகளைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

விருது மேடையில் பேசிய சினேகா, நான் சினிமாக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கை, கால் முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டு, எழுந்து நடக்கவே 8 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தார். அப்போதுதான் பார்த்திபன் கனவு படத்தின் கதையை கரு. பழனியப்பன் கூறினார். “நான் நடக்கவே முடியாது நிலையில் இருக்கிறேன் என்ன நம்பிக்கையில் கதை சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள் என்று அவர் தைரியம் கொடுத்தார். அந்த நம்பிக்கை தான் தன்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்து ஒன்றரை மாதங்களில் படபிடிப்பில் கலந்து கொண்டேன் என்று அவர் உருக்கமாக கூறினார்.

   

அதனை தொடர்ந்து “ஒரு விருது கிடைப்பதற்குப் பின்னால் எவ்வளவு வலிகள், தியாகங்கள் மற்றும் போராட்டங்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை” என்று உருக்கமாகக் கூறினார். குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் மீண்டும் திரையுலகில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகள் சவாலானவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

   

தன்னுடைய குடும்பம், குறிப்பாக கணவர் பிரசன்னா மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு படப்பிடிப்பிற்காக நீண்ட நாட்கள் வெளியில் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது ஒரு தாயாக தான் அனுபவிக்கும் மனவேதனையை அவர் பகிர்ந்துகொண்டார். அந்தப் பிரிவும், உழைப்பும் வீண்போகவில்லை என்பதை இந்த விருது உணர்த்துவதாகவும், இது தன்னைப் போன்ற உழைக்கும் பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.