தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ம்ருதி வெங்கட் தான் சினிமாவில் அறிமுகமானது குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது படங்களில் நடிப்பதற்காக சென்னையில் வசித்து வருகிறார். மாடலிங் துறையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக மாடலாக பிரபலமாகி வந்த இவர் அதிகமாக விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த திரைப்படத்தில் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ம்ருதி வெங்கட் தற்போது 7ஜி என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் உடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது .
பிளாக் மேஜிக்கை வைத்து ஒரு பீல் குட் ஹாரர் திரைப்படத்தை உருவாக்கி இருக்கின்றார் இயக்குனர் ஹாரூன். இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக தனியார் youtube சேனல் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தாங்க சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கிட்டத்தட்ட பல ஆடிஷன்களில் கலந்து கொண்டதாக கூறினார்.

தடம் திரைப்படம் தான் நான் அட்டென்ட் பண்ண முதல் ஆடிஷன் . அதற்கு முன்னதாக முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு வந்தது. இதில் ஆடிஷன் எல்லாம் கலந்து கொண்டு செலக்ட்டாகி விட்டேன். அப்போது எனது பெற்றோர்கள் சினிமாவெல்லாம் வேண்டாம் என்று என்னை இழுத்துச் சென்று விட்டார்கள். அதற்கு பிறகு தான் தடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். மேலும் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை நான் மிஸ் பண்ணியதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
