ரஜினியுடன் 3 நாட்கள் தான்.. அதுக்கப்புறம் முடியல.. சூப்பர் ஹிட் படத்திலிருந்து விலகிய சிம்ரன்.. அவரே சொன்ன உண்மை..!!

By Priya Ram

Published on:

நடிகை சிம்ரன் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யாவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்ரன் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, வாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது சிறு வயது நண்பரான தீபக் என்பவரை சிம்ரன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சிம்ரன் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விக்ரம் நடித்த மஹான், ஆர்யா நடித்த கேப்டன் ஆகிய படங்களில் சிம்ரன் நடித்தார். மேலும் சிம்ரன் நடித்த அந்ததன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

சமீபத்தில் சிம்ரனின் சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. அதில் தொகுப்பாளர் கோவை சரளா, வடிவேலு ஆகியோர் ஒரு படத்தை என்ன சிம்ரன் இதெல்லாம் என டயலாக் பேசி இருப்பார். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிம்ரன் அந்த கட்சியை பார்த்தவுடன் நான் சிரித்து விட்டேன். அந்த காட்சியில் சிரிக்காமல் கண்ட்ரோல் பண்ண முடியாது.

அது மகிழ்ச்சியாகவும் மக்களை சந்தோஷப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என கூறினார். மேலும் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் இணைந்து 3 நாட்கள் மட்டும் நடித்தேன். அதன் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக படத்திலிருந்து விலகி விட்டேன். சில வருடங்கள் கழித்து ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைத்து நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram