தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி.. தோலுக்கு மேல் வளர்ந்து நிக்கும் சிம்ரனின் மகன்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..

By Mahalakshmi

Updated on:

90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக சினிமா துறையில் வலம் வந்தவர்  நடிகை சிம்ரன்; இவர் தனது நடிப்பு திறமையாலும் டான்ஸ் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனி பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். தற்போது நடிகை சிம்ரரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

நடிகை சிம்ரன், ரஜினிகாந்த, கமலகாசன், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி  நடிகர்களுடன் ஜோடியாக  நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. இவர் தமிழ் ,ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா துறையில் பிஸியாக இருந்த நடிகை சிம்ரன் தீபக் பக்கா என்பவரை 2003 ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்  நடிகை சிம்ரன்.

இந்த வகையில், தற்போது சிம்ரன், கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் இணைந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோலுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இருக்கிறார்கள். இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi