சில்க் மார்க்கெட்டில் இருந்த போது யாரையும் மதிக்கமாட்டார்.. அம்மாவுக்கே இதுதான் நிலைமை.. பிரபல நடிகை பகிர்ந்த ஷாக்கிங் தகவல்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

   

இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது. அவரோடு பழகியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களை சொல்கின்றனர். அவரோடு நெருங்கி பழகிய காதலரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி அவரோடு இணைந்து நடித்த நடிகையான ஜோதி லட்சுமி ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதில் “ சில்க் உச்சத்தில் இருந்த போது சக நடிகைகளான எங்களை யாரையுமே மதிக்க மாட்டார். சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு காதல்தான். காதலிக்கலாம் தவறு இல்லை. ஆனால் அதற்கான பெற்ற தாயை, உடன்பிறந்த சகோதரனை ஒதுக்கி வைத்திருக்க கூடாது.

அவர் தனது காதலருக்காக தாயை, சகோதரனை ஒதுக்கி வைத்தது மிகப்பெரிய தவறு. ரத்த உறவுகள் கூட இருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு. அவர்கள் கொஞ்சம் தின்றாலும் நமக்கு கொஞ்சம் வைத்துவிடுவார்கள். ஆனால் சில்க் தன்னுடைய தாயையே முழுவதுமாக ஒதுக்கிவைத்து தவறு செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.