இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. இவர் தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவருக்கென தற்பொழுது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நூறுகோடி வானவில் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதுதவிர இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சித்தி இத்னானி. இப்படத்தில் அவர் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாகிராமிலும் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சித்தி இத்னானி. தற்போது இவர் தொடை தெரிய கருப்பு நிற ஆடையில் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…