“காதலிப்பது பிடிக்கும் கல்யாணம் பிடிக்காது” ஒரே போடாய் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்..!!

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகியாகவும் அறியப்பட்டார். இவர் முதன் முதலில் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலம் தான் பிரபலமானார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுருதிஹாசனுக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது.அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் 3 என்ற திரைப்படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

அந்தத் திரைப்படம் வெளியானபோது கிடைத்த வரவேற்பை காட்டிலும் ரீ ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இன்றளவும் அந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

   

தமிழ் சினிமாவில் பெரிய அளவு திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். அங்கு மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிசியான நடிகையாக உள்ளார். தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவ் இன் உறவில் இருந்தார். ஆனால் திடீரென பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்துவிட்டார்கள்.  சமீபத்தில் கூட திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், காதலிப்பது பிடிக்கும். ஆனால், இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை. திருமணம் குறித்து யோசித்ததில்லை. ஆர்வமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.