“வாழ்க்கைக்கு துணை தேவை, ஆனால்….” குழந்தைவேண்டும் என்றால்…! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை, கல்யாணம் மற்றும் தாய்மை குறித்த நிலைப் பாடுகளை பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வாழ்க்கைக்கு நம்மைப் புரிந்துகொள்ளும் ஒரு துணை அவசியம் என்றாலும், சமூகத்திற்காகக் கல்யாணம் என்ற வட்டத்திற்குள் வர வேண்டிய கட்டாயமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்யாணம் என்ற பெயரில் ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்த்து, அந்தப் பணத்தைக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

   

தனக்கு இருந்த பிசிஓஎஸ் உடல்நலச் சிக்கலால் கர்ப்பம் தரிப்பது குறித்து முன்பு பயம் இருந்ததாகவும், ஆனால் தற்போது மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு அந்தப் பயம் நீங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். குழந்தை பெற்றுக்கொள்ளக் கல்யாணம் மட்டுமே வழியல்ல என்றும், குழந்தையைத் தத்தெடுத்தும் வளர்க்கலாம் என்றும் தெரிவித்த ஸ்ருதி ஹாசனின் இந்தக் கருத்துக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.