நடிகை ஷோபனா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான ஷோபனா எனக்குள் ஒருவன், விரதம், இது நம்ம ஆளு, சிவா, பாட்டுக்கு ஒரு தலைவன் வாத்தியார் வீட்டு பிள்ளை, என்கிட்ட மோதாதே, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் ஷோபனா 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தில் வரலட்சுமியின் அம்மாவாக மாடர்ன் கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்துள்ளார். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் சீசன் நான்கில் நடுவராகவும் இருந்தார். இந்த நிலையில் ஷோபனாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது பத்து வயதில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக மங்களநாயகி படத்தில் நடித்துள்ளார். அவர் கே.ஆர் விஜயாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஷோபனாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.