இந்த போட்டோவில் ஃபுல் மேக்கப்பில் இருக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா?… Guess பண்ணுங்க பாக்கலாம்…

By Begam on புரட்டாதி 2, 2023

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல நடிகை பிக் பாஸ் ஷிவானியின்  சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சீரியல்களில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சவானிக்கு முதலில் மக்கள் மத்தியில் எதிர்ப்பே இருந்தது.

   

 

ஆனால் வெளியில் வரும் பொழுது அவர் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷிவானி இவர் அவ்வப்போது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. அதன்படி ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷிவானி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையாயத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…