கவுண்டமணி கூட நடிக்க மாட்டேன்னு சொன்னதும்.. எல்லா படத்தில் இருந்தும் தூக்கிட்டாங்க.. அவரால தான் என் லைஃபே.. அதிர்ச்சி கிளப்பிய ஷர்மிலி..!

By Mahalakshmi on மே 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி மன்னனாக வலம் வந்தவர் கவுண்டமணி. தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்த கவுண்டமணி இப்போது வரை தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து தான் இருக்கின்றார். இப்படி பேரும் புகழுடன் இருந்து வந்த கவுண்டமணியை பற்றி யாரும் பெரிய அளவில் புகார் கூறியது கிடையாது. ஆனால் இவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை ஷர்மிலி கவுண்டமணி குறித்து பல சர்ச்சையான விஷயங்களை கூறியிருக்கின்றார்.

   

சமீபத்தில் நடிகை வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை ஷர்மிலி. அந்த நேர்காணலில் நடிகர் கவுண்டமணி மீது பல புகார்களை அடுக்கி இருக்கின்றார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: “குரூப் டான்சராக தனது சினிமா பயணத்தை தொடங்கினேன். சில காலம் கழித்து என்னால் நடனமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

   

அதனால் நடிக்க ஆரம்பித்தேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், எங்க வீட்டு வேலன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவுண்டமணியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு காமெடி எல்லாம் செட் ஆகாது. அது மட்டும் இல்லாமல் அவர் வயசு என்ன? என் வயசு என்ன? என சொல்லி அவருடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டேன்.

 

ஆனால் ஒரு படத்தில் கட்டாயப்படுத்தி என்னை அவருடன் நடிக்க வைத்து விட்டார்கள். அந்த படத்திற்கு பிறகு எங்கள் ஜோடி நல்ல ஒர்க் அவுட் ஆனதால் தொடர்ந்து கவுண்டமணியுடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்தேன். கவுண்டமணியுடன் நான் நடித்ததால் தான் பிரபலமானேன் என்று பலரும் கூறினார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து நடித்ததால் மற்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தேன்.

வீரா படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த தேதியில் கவுண்டமணி தேதி கொடுத்திருந்த காரணத்தினால் அதில் நடிக்கவிடாமல் செய்துவிட்டார். ஒரு கட்டத்தில் நான் வேறு சில படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கூட கவுண்டமணியிடம் கேட்டு தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் பத்திரிக்கையில் பலரும் பலவிதமாக எழுத தொடங்கினார்கள்.

ஒருநாள் கவுண்டமனிடம் நேரடியாக சென்று இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதனால் கடுப்பான கவுண்டமணி அப்போது நான் புக் ஆகி இருந்த அனைத்து படங்களிலிருந்தும் என்னை தூக்கிவிட்டார். அவருடன் புக்கான படங்கள் மட்டுமில்லாமல் வேறு படங்களில் இருந்தும் என்னை தூக்கி எனது சினிமா வாழ்க்கையை கெடுத்துவிட்டார். என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். மேலும் திருமணமே வேண்டாம் என்று இருந்த நான் 40 வயது வரை சிங்கிளாக இருந்தேன். தற்போது திருமணம் செய்து கொண்டு நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். என் கணவர் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறார்” என்று பேசி இருந்தார்.