தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த திரைப்படமாக இருந்தது நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன். இந்தத் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நாயகனாக நடிக்க இந்த படத்தில் கதாநாயகியாக நிஷாந்தி எனும் சாந்தி பிரியா நடித்திருந்தார். முதல் திரைப்படம் இதுதான் என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த திரைப்படத்தில் சாந்திப்பிரியா நடிப்பு எதார்த்தமாக இருந்தது.. இந்த நடிப்பின் மூலமாக தமிழ் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் இவ்வாறு நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் நடிகை பானுப்பிரியாவின் உடன் பிறந்த சகோதரி. இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் இந்தி டிவி சீரியல்களிலும் நடிக்க சென்று விட்டார். இவர் இறுதியாக 1994 ஆம் ஆண்டு ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு திரையுலகை விட்டு விலகி விட்டார். 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் மும்பையிலேயே செட்டிலானார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு தான் இவருடைய கணவர் திடீரென மரணம் அடைந்தார்.

தன் கணவரின் மரணத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்த இவர் பிறகு சில இந்தி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது 54 வயதாகும் இவர் சமீபத்தில் மொட்டை அடித்துக் கொண்டு வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. இப்படியான நிலையில் சாந்தி பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், நான் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் கணவர் இல்லாத வாழ்க்கையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என் கணவர் எங்களை விட்டு பிரியும் போது என் பெரிய பையனுக்கு 10 வயசு சின்ன பையனுக்கு நான்கு வயது தான். அவர் இல்லாமல் போனதை என்னோட சின்ன பையனால ஏத்துக்கவே முடியல. என் கணவர் இறந்தது என்னோட அம்மா வா நம்ம வீட்டுக்கு போலாம் உன்னுடைய வாழ்க்கையை பார்க்கலாம் என்று சொல்லிக் கூப்பிட்டாங்க. உடனே நான் இதுதான் என்னுடைய வீடு இதுதான் என் வாழ்க்கை என்னுடைய இரண்டு பசங்களையும் நான் பாத்துக்குறேன் நான் இங்கேயே இருந்துக்கறேன் நீ கெளம்பு என்று சொல்லி அனுப்பி வச்சேன். சமீபத்தில் கூட நான் மொட்டை அடித்ததை பார்த்து யாரும் எதுவுமே கேட்காம அவங்களா ஒரு முடிவு பண்ணிக்கிட்டாங்க. திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டாங்க.

என்னோட வீட்டில் கண்ணாடியை பார்த்து நான் ரொம்ப அழகா இருக்கேனு என்னை நானே பாராட்டி கிட்டேன். என்னுடைய அக்கா பானுப்பிரியாவை பொறுத்தவரை நான் ஒரு பைத்தியம் என்ன வேணாலும் பண்ணுவேன் என்று அவர்கள் நினைச்சுகிட்டு இருப்பாங்க. அதே சமயம் எனக்கு மனநிலை சரியில்ல பைத்தியமாகிட்டேன் என்றெல்லாம் பலரும் பேச ஆரம்பிச்சாங்க. அவங்க அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு எல்லாத்தையும் கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.

எல்லார் வீட்லயும் ஒரு கதை இருக்கும். எல்லாத்தையும் பொத்தி மூடி வைக்கணும் என்று நினைக்க முடியாது. நாம் பாலிவுட் செல்ல முக்கிய காரணம் எனக்கு அங்கிருந்து நல்ல வாய்ப்புகள் வந்ததால் நான் சென்று விட்டேன். என்னுடைய அக்காவுக்கும் தம்பிக்கும் இரண்டாவது மொழி தமிழ் தான். ஆனா நான் இந்தி கத்துக்கிட்டேன். அக்கா இந்தி படத்தில் நடிக்கும் போது நானும் அவங்க கூட சூட்டிங் போயிட்டு தான் வருவேன். அதன் பிறகு பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் நான் அப்படியே நகர்ந்து விட்டேன் என்று சாந்தி பிரியா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
