actress Shalini

நடிகர் அஜீத்குமாரின் மனைவிக்கு இப்படி ஒரு ஏமாற்றமா? அதுகூட நடக்கலையே…? – தனது வருத்தத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை ஷாலினி!

By Elango on மாசி 23, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி ஷாலினி. பிறகு காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அலைபாயுதே அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு பார்த்தேன் ரசித்தேன் என பல படங்களில் நடித்தார். பிறகு நடிகர் அஜீத்குமாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பங்கேற்ற நடிகை ஷாலினி மேடையில் பேசியதாவது, இதுவரை என்னுடைய பிள்ளைகள் நான் நடித்த எந்த ஒரு படத்தையும் முழுமையாக பார்த்தது இல்லை. இந்த மேடையை ஒரு சிறிய கோரிக்கைக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். தயவு செஞ்சு என் படங்களில் ஒன்றையாவது முழுமையாக பாருங்கள்.

   

என்னுடைய மகள் அனோஷ்கா சமீபத்தில் தனது பிரண்ட்ஸ் மூலமாக அலைபாயுதே படம் குறித்து அறிந்திருக்கிறார். என்னுடன் அந்த படத்தை சேர்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் என்னிடம் கூறினார். ஆனால் அது கூட இன்று வரை நடக்கவில்லை என்று நடிகை ஷாலினி அதில் கூறியிருக்கிறார்.