படப்பிடிப்பில் வேண்டுமென்றே கன்னத்தில் பளார் என அறைந்த சில்க் ஸ்மிதா.. ஷகிலா பகிர்ந்த ஷாக்கிங் சம்பவம்..!

By Nanthini on சித்திரை 15, 2025

Spread the love

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் ஷகிலா. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவருடைய படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இவர் கிட்டத்தட்ட 110 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த சகிலா தற்போது குணச்சித்திர வேதங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் மீதான கண்ணோட்டமே ரசிகர்களுக்கு மாறிவிட்டது.

பிரபல நடிகை ஷகிலா.. "எசகுபிசகாய்" சிக்கிட்டாரே.. அடுத்த செகண்டே, பாய்ந்து  வந்த நடிகர் கஞ்சா கருப்பு | Famous actress shakeela caught by fans and  ganja karuppu saved in ...

   

ஆரம்பத்தில் ரசிகர்கள் இவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும் தற்போது வைத்திருக்கும் அபிப்ராயமும் 100 மடங்கு வித்தியாசமாகத்தான் உள்ளது. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் இவரை மம்மி என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர் மேலும் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.

   

ஷகிலா கன்னத்தில் அறைவிட்ட பிரபல கவர்ச்சி நடிகை.. படத்திலிருந்து பாதியில்  ஓட்டம்

 

இப்படியான நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு சகிலா அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளார். அதில், நானும் சில்க் சுமிதாவும் ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சியை படமாக்கப்பட இருந்தது. அப்போது நான் அவரிடம் அக்கா எப்படி அடிப்பீங்க மெதுவா அடிப்பீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர் அது ஷாட்டில் வந்துவிடும், அது ஒன்னும் டென்ஷன் இல்ல அது ஈஸியா வந்துடும் என்று சொன்னாங்க.

படப்பிடிப்பில் ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா.. ஷகிலா சொன்ன அந்த காரணம்! |  Actress shakeela talks about silk smitha - Tamil Filmibeat

ஆனால் அந்த சாட்டின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஆக்சன் என்று சொன்னதும் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அறைந்து விட்டார். அவர் கன்னத்தில் அடித்ததில் நான் அழுதுவிட்டேன். அத்தனை பேர் முன்பு அவர் என்னை அடித்தது அவமானமாக இருந்தது. அதிலிருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது என்று ஷகிலா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.