நெஞ்சோரத்தில், என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… 7 -வது திருமண நாளை கொண்டாடும் ‘பிச்சைக்காரன்’ பட நடிகை…

By Begam

Published on:

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தன்னுடைய கதாபாத்திரமாகவே மாறி இத்திரைப்படத்தில் தனது கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

   

மேலும் நடிகை சாட்னா டைட்டஸ் பிச்சைக்காரன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை காதலித்து ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது.  நடிகை சாட்னாவின் தாய் ‘என் மகளுக்கு பதிவுத் திருமணம் நடக்கவில்லை. கார்த்திக் என் மகளை மூளை சலவை செய்து எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார் ‘ என்று  குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக், சாட்னா டைடஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்து, இருவரின் பூரண சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம் என்று இருவரும் கையெழுத்திட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இவர்களது  திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு பிரமாண்டமாக நடந்தது.

தற்பொழுது  இந்த ஜோடி தங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும், திரைபிரபலங்களும்  தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Satna Titus (@satnatitusofficial)