தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் குடும்பத்தில் பெண்களை அடக்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களின் கதையை தோல் உரித்து காட்டுகிறது. மேலும் இந்த சீரியலில் குடும்பத்து பெண்கள் அவர்களை எதிர்த்து போராடியும் வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யபிரியா.
இந்த சீரியலில் அதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார். இவரின் மறைவிலிருந்து தற்பொழுது வரை ரசிகர்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் அவரது மரணம் குறைத்து நடிகை சத்யப்ரியா அளித்திருக்கும் போட்டியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர், நடிகர் மாரிமுத்துவுக்கு இருதயம் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பது தங்களுக்கு இதுவரை தெரியாது என்றும், முன்கூட்டியே தெரிந்திருந்தால் கமலேஷ் அவரை கண்டிப்பாக தனியே செல்ல விட்டிருக்க மாட்டார். சீரியல், திரைப்படம் என பிசியாக இருந்ததால் அவர் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும் உருக்கமாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…