சன் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் கல்பனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் பிறந்தது கர்நாடகாவில். இவர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
பின்னர் அதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித், விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்து இருந்தார். வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வந்த காயத்ரி பின்னர் சின்ன திரையில் அடியெடுத்து வைத்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த மெட்டி ஒலி சீரியலில் இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சில வருடங்களாக சீரியலுக்கு பிரேக் விட்டவர் ரோஜா சீரியல் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கினார். இவர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இவரின் கல்பனா கேரக்டருக்கு ஆதரவு அளித்தனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இவர் தற்பொழுது வெறித்தனமாக சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram