பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் நாயகன் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.
எம்டன் மகன் படத்தில் சரண்யா நாசருக்கு மனைவியாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு பிரபல காமெடி சீன் இருக்கும். சமீபத்தில் சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டியில் கூறியதாவது, எம்டன் மகன் திரைப்படத்தில் நடுரோட்டில் வெயிலில் உருள சொன்னார்கள். அந்த காட்சியை நான் நடிக்க மாட்டேன் என கூறினேன்.
டைரக்டர் திருமுருகன் சார் கெஞ்சி கேட்டும் நான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு அவமானமா இருந்துச்சு. நிஜமாகவே ரோட்டில் 12 மணி உச்சி வெயில்ல அந்த காட்சியை நடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுக்கப்புறம் திருமுருகன் சார் என்னை சம்மதிக்க வைத்தார். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரே ஒரு தடவை தான் உருளுவேன்.
அதுக்குள்ள கரெக்டா எடுத்துக்கணும் ரீடைக் எல்லாம் கேட்க கூடாதுன்னு சொல்லிட்டேன். அந்த ஒரு சீனுக்காக தான் நான் மாநில அளவில் விருது வாங்கினேன். அதற்காக திருமுருகன் சார், வடிவேல், பரத் ஆகியோருக்கு நான் நன்றி சொல்லணும் என கூறியுள்ளார்.
