விஜய்க்கு தங்கச்சியாக நடித்த சரண்யா மோகனுக்கு கல்யாணம் ஆகி இவ்ளோ பெரிய பசங்களா..? வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்..

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் மைக் மோகன், 80 ஸ் பிறந்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்; இவரின் மகள் நடிகை சரண்யா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர்களின் ஃபேமிலி போட்டோஸ் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்ததும் நடிகை சரண்யாவுக்கு இவ்வளவு பெரிய மகன், மகள் உள்ளார்களா என ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

   

விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’  திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இளம் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை சரண்யா. மேலும் பல பட வாய்ப்புகள் வந்த நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சினிமா துறையில் நல்ல மார்க்கெட்டிங் கொண்ட நடிகையாக வலம் வந்த நடிகை சரண்யா அதன்பிறகு ஜெயம் கொண்டான், விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம், பஞ்சாமிருதம் போன்ற திரைப்படங்களில் நடித்து   ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகை சரண்யா, 2015 ஆம் ஆண்டு மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் பத்மநாதன் என்ற மகனும்; அன்னபூர்ணா என்ற மகளும் இருக்கிறார்கள். திருமணமான  பிறகு சினிமா துறைக்கு வராத நடிகை சரண்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாகவே இருந்துள்ளார். சமீபத்தில் உடல் எடை அதிகமான தோற்றத்துடன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அது நடிகை சரண்யாவா என ஆச்சிரியப்படும் அளவிற்கு குண்டாக இருந்துள்ளார் என ரசிகர்கள் கூறிய நிலையில் தற்போது நடிகை சரண்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பசுமையான பச்சை நிற உடைகள் அணிந்து பேமிலி போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக் மட்டும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதில் நடிகை சரண்யாவின்  மகளான அன்னபூர்ணா அப்படியே அம்மாவை உரித்து வைத்தது போல இருக்கிறார் என்றும்  இவர்கள் பேமிலி போட்டோவை பார்த்தால் கண்ணுபடும் அளவிற்கு உடல் எடை குறைத்து அழகாக மாறி உள்ள நடிகை சரண்யாவிற்கு பட வாய்ப்புகள் வரும் என ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Mahalakshmi