நடிகை சங்கவி, விஜய்யுடன் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 90-களின் பிரபல நடிகை சங்கவி, ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. அந்த சமயத்தில், நடிகர் விஜய், சங்கவி ஜோடி மிகவும் பிரபலமடைந்தது. மேலும், இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அத்திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியை படமாக்கும் போது, சங்கவியின் முகத்திற்கு அருகே நெருப்பு போகும். அந்த சமயத்தில் விஜய், அவரின் புடவையை பிடித்து இழுக்க வேண்டும்.
அதன்பிறகு, அவர் விஜய்யை அடிக்க வேண்டும். அந்த காட்சியை படமாக்க பல டேக்குகள் எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், சங்கவியின் ஆடை மீது நெருப்பு வைத்திருக்கிறார்கள். இதில், பதறிப்போன அவர், விஜய் தன் புடவையை பிடித்து இழுக்கும் முன்பே அவரை கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டாராம். அப்போது, விஜய் “அடிச்சா, காதிலிருந்து சத்தம் வரும்னு சொல்வாங்க. அதை இப்போ தான் அனுபவித்திருக்கிறேன் ” என்று கூறினாராம்.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…