Categories: சினிமா

கண்டுபுடிச்சாச்சு…! ‘அயலான்’ படத்தில் வரும் சேட்டை பிடித்த ஏலியன் யார் தெரியுமா…? புகைப்படம் படுவைரல்…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்துவருகிறது.இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் டீசர் லான்ச் நடைபெற்றது. டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது.

அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. தற்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அவரின் பெயர் வெங்கட் செங்குட்டுவன் என கூறப்படுகிறது. இதோ அவரின் புகைப்படம்…

Begam

Recent Posts

“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…

4 minutes ago

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

8 minutes ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

13 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

21 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

27 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

34 minutes ago