அஜித் படத்துக்கு NO சொன்னதுக்கு விஜய் தான் காரணம்?…. இப்ப வரைக்கும் ஃபீல் பண்றேன்…. மனம் திறந்த பூவே உனக்காக சங்கீதா…!!!

By Mahalakshmi on ஐப்பசி 20, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. பெரும்பாலும் குடும்ப பங்கான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் முதன்முதலாக 1978 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரை உலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதய வாசல், நாட்டுக்கொரு நல்லவன், வசந்த மலர்கள், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் இந்த திரைப்படங்களை காட்டிலும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சங்கீதா மிகவும் அழகாக நடித்திருப்பார்.

   

 

விஜயின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு சங்கீதாவின் கதாபாத்திரமும் ரசிகர்களுடைய அதிக அளவில் பேசப்பட்டது. இவர் 2000 ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமா உலகை விட்டு விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று பேசிய சங்கீதா பூவே உனக்காக திரைப்படம் பற்றி கூறியிருந்தார். அதாவது பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அஜித்தின் காதல் கோட்டை படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது பூவே உனக்காக மற்றும் சில மலையாள திரைப்படங்களில் தான் நடித்து வந்ததால் அஜித்தின் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது வரை அந்த படத்தை மிஸ் பண்ணியதை எண்ணி வருந்தி வருகிறேன் என்று கூறியிருந்தார்.