ஸ்டைலான உடை… கண்கவரும் நகை… இணையத்தை அலறவிடும் நடிகை சங்கீதா கிரிஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…

By Begam on கார்த்திகை 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களில் க்ரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளும் ஒருவர்.நடிகை சங்கீதா 1998 இல் நடிகர் நெப்போலியன் நடித்த ‘பகவத்சிங்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

அதேபோல இவரது கணவர் க்ரிஷ் 2006ல் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.இதை தொடர்ந்து இவர் அழகிய அசுரா, சிங்கம் 3 , முப்பரிமாணம் போன்ற பல திரைப்படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சங்கீதாவும் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சமீபத்தில் நடிகை சங்கீதா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சங்கீதா 2009 ல் பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவியா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார்.

இவர் சமீபத்தில் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது வைர நகைகளை அணிந்து நடத்திய போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.