“கிரிஷ் என்னை அப்புடித்தான் கூப்பிடுவாரு… அவசரப்பட்டு கல்யாணம் பன்னிட்டேன்னு”… தனது திருமணம் குறித்து மனமுருகி பேசிய சங்கீதா…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பாடகர் க்ரிஷ் மற்றும் நடிகை சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 இல் நடிகர் நெப்போலியன் நடித்த ‘பகவத்சிங்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

   

சமீபத்தில் நடிகை சங்கீதா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை சங்கீதா 2009 ல் பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவியா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். தற்பொழுது இவர்கள் மகிழ்ச்சியான நட்சத்திர ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சங்கீதா கிரிஷ் தனது கணவர் குறித்தும், திருமண வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘ 100 தடவைக்கு மேல யோசிச்சு இருக்கேன். அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டமோன்னு . ரொம்ப கஷ்டமா பீல் பண்றோம். அப்படி எல்லாம் நான் நினைச்சேன். அதெல்லாம் மீறி ஒரு விஷயம், எங்களுடைய கல்யாணம் இந்த அளவுக்கு தொடர்வதற்கு கிருஷ் தான் காரணம்.

நான் ஏதாவது ஒரு விஷயம் சொன்னேனா.. என்ன நான் திருத்திக்கிறேன்ம்மா.. அப்படின்னு சொல்லுவாரு. அவரு என்ன மனைவியா பாக்குறத விட அவருடைய அம்மாவை தான் பார்ப்பாரு.  அம்மான்னு தான் எப்பவும் கூப்பிடுவாரு.  இப்படி என்னை மாத்திக்கிறேன்.. திருத்திக்கிறேன்னு.. சொல்றவங்க கூட யார் வேணும்னாலும் வாழ்ந்திடலாம்” என்று தனது திருமண வாழ்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சங்கீதா. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)