சூர்யா செஞ்ச விஷயம்…! “என் வாழ்க்கையில பெஸ்ட் மெமரி அதுதான்…” மனம் திறந்து பேசிய பிரபல நடிகை…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2025

Spread the love

பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006-ஆம் ஆண்டு ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா குடும்பத்தை கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சூர்யா ஜோதிகா தம்பதியினர் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் வேலை பார்த்த போது நடந்த அனுபவங்களை நடிகை சமீரா ரெட்டி ஒரு பேட்டியில் கூறினார். அவர் கூறியதாவது, வாரணம் ஆயிரம் படப்பிடிப்பிற்காக சான் பிரான்சிஸ்கோவில் இருந்தோம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்தார். தந்தையாக போவதற்காக சூர்யா ரொம்பவே ஆர்வத்துடன் இருந்தால் அந்த சமயம் பிறக்கப் போகும் குழந்தைக்காக நிறைய டிரஸ் எடுத்தார். அது பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருந்தது. அந்த அனுபவங்கள் என் வாழ்க்கையில் சிறந்தது என சமீரா ரெட்டி கூறியுள்ளார்.