சின்னத்திரையில் கால் பதிக்கும் நடிகை சமந்தா… இந்த பிரபல டிவியின் ரியாலிட்டி ஷோவிலா..? வைரலாகும் புகைப்படங்கள்…

By Begam

Updated on:

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன.

   

அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் ஒரு வருடத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே அவர் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டுள்ளார். தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா ‘சாகி’ என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும்  செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி பல்வேறு விதமான சமுக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ‘எம் டிவி ஹஸ்டில் சீசன் 3’ என்ற ரியாலிட்டி ஷோ எம் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் நடுவராக நடிகை சமந்தா பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் பாப் பாடகர் பாட்ஷா நிகழ்ச்சியில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MTV Hustle (@mtvhustle)