தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமந்தா ஒரு சிங்க பெண்ணாக இந்த அளவுக்கு உயர்ந்துள்ள தன் முக்கிய காரணம் அவருடைய கடின உழைப்பு மட்டும்தான்.
தனது படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில் 500 முதல் 1000 ரூபாய்க்காக பல திருமணங்களில் ரிசெப்ஷன் கேர்ள்ளாக கலந்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஆடிஷன் அட்டென்ட் செய்துள்ளதாக பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார்.
இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்த ஏ மாயா சேஷாவா என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் இந்த படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் கௌதம் மேனன் இயக்கினார். மிகக் குறுகிய காலத்தில் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் முன்னணி நடிகையாக சமந்தா இடம் பிடித்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தா திடீரென்று தனது கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்.
இருவருமே மனம் ஒற்று பிரிவதாக அறிவித்திருந்தனர். சமந்தா தற்போது தன்னுடைய மயோசிடிஸ் பிரச்சனையை கடந்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகின்றார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதாவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சமந்தா தன்னுடைய பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் சமந்தாவின் அண்ணன் டேவிட் பிரபுவுக்கும் நிக்கோலாய் என்ற வெளிநாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அப்போது தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும் சமந்தா அதில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் சமந்தாவின் அண்ணனுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.