இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.

நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நோயிலிருந்து மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார்.

சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

கடைசியாக சமந்தா நடிப்பில் கடந்த 2023 வருடம் சாகுந்தலம், மற்றும் குஷி படங்கள் வெளியானது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்வியை கொடுத்தது . ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் உருவான சிட்டாடல் ஹனி பனி என்ற வெப் சீரிஸில் நடித்தார்.

கடந்த 2024 ஆம் வருடம் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதியாக சமந்தா அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

