தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன.

அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். அதனைப் போலவே விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

