இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் பல படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் பிரபல வெப் சீரியஸ் இயக்குனர் ராஜ் நெடிமூரே என்பவரை கோவை ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இப்போது சமந்தா படங்களில் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்தனர். அங்கிருந்து கூட்ட நெருக்கடியில் சிக்கிய சமந்தா அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்து காரில் ஏறுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. ரசிகர்கள் மத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி சமந்தா திக்குமுக்காடி விட்டார்.
சமீபத்தில் ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வாலுக்கு இப்படியொரு மோசமான நிலைமை ஏற்பட்டது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இப்போது நடிகை சமந்தாவும் அதே போல் கூட்ட நெரிசலில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டது பெரிய அதிர்ச்சியை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…