விவாகரத்திற்கு பிறகு ஒரே மேடையில் ஏறிய நடிகை சமந்தா- முன்னாள் கணவர் நாகசைதன்யா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on மார்ச் 21, 2024

Spread the love

முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகார் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு யார் கண் பட்டதோ தெரியவில்லை.

   

கடந்த 2021-ஆம் ஆண்டு சமந்தா தனது காதல் கணவரை விவாகரத்து செய்து புரிந்து விட்டார். விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

 

அதன் பிறகு யாரும் எதிர்பாராதவிதமாக சமந்தா மையோசிடிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு தற்போது சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சமந்தாவும் நாக சைதன்யாவும் கலந்து கொண்டனர்.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை ஆகும். வெப் சீரிஸின் ப்ரோமோஷன் பணிகளுக்காக இருவரும் தனித்தனியாக மேடை ஏறி பேசினர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.